திரைச்செய்திகள்
Typography

தனது கட்சிக்கென தனிப் பாடல்களை வெளியிட்டுவிட்டார் கமல்.

நாடு முழுக்க இனி நடைபெறும் கட்சிக் கூட்டங்களில் முழங்குவதற்கேற்ப தயாரான இப்பாடலை சினேகன் எழுதி, தாஜ்நூர் இசையமைத்திருக்கிறார்.

மொத்தம் ஆறு பாடல்கள். ஆறும் அதிரடி! ஆச்சர்யம் என்னவென்றால் இந்த பாடல் உருவாகிற நேரத்திலேயே தன் விருப்பு வெறுப்புகளை சொல்லி பாடல்களை இன்னும் மெருகேற்றினாராம் கமல். பொதுவாக சினேகன் எழுதிக் கொடுக்கிற பாடல்களில் கை வைக்கிற அளவுக்கு இடம் கொடுக்க மாட்டார் அவர்.

ஆனால் கமல்ஹாசனே விரும்பி ஆங்காங்கே வைத்த திருத்தங்களை அடுத்த நொடியே ஏற்றுக் கொண்டாராம் சினேகன். இதுதான்ங்க பாட்டு புலவருக்கும் கட்சித் தொண்டருக்கும் இருக்கிற வித்தியாசம்!

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்