திரைச்செய்திகள்
Typography

பெரிய ஹீரோக்களின் கால்ஷீட் அலட்டலுக்கு பதிலடி கொடுக்கிற விதத்தில்தான் ஹீரோவாக நடிக்க வந்தார் சுந்தர்சி. உங்க நகத்துக்கு எங்க முதுகுதான் கிடைச்சுதா? என்று புறமுதுகிட்டு ஓடியது ஜனக்கூட்டம்.

எப்படியோ... நம்ம பண்ணியது தப்பு என்று உணர்ந்த சுந்தர்சி, திரையில் முகம் காட்டும் எண்ணத்தை கைவிட்டு ஜனங்களை ஆசுவாசப்படுத்தினார். எல்லாம் போச்சு இப்போ! ஏன்? சும்மாயிருந்த சுந்தர்சியிடம், ‘மீண்டும் நீங்க நடிக்கணும்ணே...’ என்று ஆசை காட்டினாராம் இயக்குனர் முகவரி துரை. இருவரும் சேர்ந்து ஒரு த்ரில்லருக்கு பிளான் போடுகிறார்கள். ஜனங்களே உஷார்!

BLOG COMMENTS POWERED BY DISQUS