திரைச்செய்திகள்
Typography

‘இமைக்கா நொடிகள்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கத்தில் நடந்தது. தான் நடிக்கும் பட நிகழ்ச்சிகள் எதற்கும் வர மாட்டார் நயன்தாரா. ஆனால் அதர்வாவும் வராததுதான் பத்திரிகையாளர்களுக்கு ஆச்சர்யம்.

திடீர்னு நிகழ்ச்சியை வச்சதால அதர்வா கூட வரல என்று இயக்குனர் அஜய் ஞானமுத்து சமாளித்தாலும், நிஜம் அதுவல்ல. பின்னே? ஆரம்பத்தில் அதர்வாதான் இப்படத்தில் கமிட் ஆனார். அதற்கப்புறம் கொஞ்சம் வெயிட்டா இருக்கட்டுமே என்று பெருந்தொகை கொடுத்து நயன்தாராவை உள்ளே கொண்டு வந்தார்கள். பிறகு மொத்த படமும் நயன்தாரா படமாகிவிட்டது. இப்போது டைட்டிலில் நயன்தாரா பெயரை முதலில் போட்டு, அதற்கப்புறம்தான் அதர்வா பெயரையே போடுகிறார்களாம். எரிச்சலான அதர்வா, எப்படியாவது போங்கப்பா... என்று படத்தை கை கழுவி விட்டார். பிரமோஷன்களுக்கும் வர மாட்டேன் என்று கூறிவிட்டாராம். 

BLOG COMMENTS POWERED BY DISQUS