திரைச்செய்திகள்

விக்ரம் மகன் துருவ் அறிமுகமாகும் படத்தை பாலா இயக்குகிறார். படத்தின் பெயர் வர்மா. இவ்வளவு காலம் ஹீரோயின் கிடைக்காமல் அல்லாடி வந்த பாலாவுக்கு லட்டு போல வந்து சேர்ந்திருக்கிறார் மேகா. தமிழுக்குதான் புதுசு.

பெங்காலியில் ஒரே ஒரு படத்தில் நடித்திருக்கிறாராம். பொதுவாக தன் பட ஹீரோயின்களை தவுட்டுப் பானையில் அமுக்கி வைத்த கோழி முட்டை போல மூச்சு முட்ட வைக்கும் பாலா, இவரை மட்டும் பூப்போல ஹேண்டில் பண்ணப் போவதாக பேச்சு இருக்கிறது. ஏன்? ‘அர்ஜுன் ரெட்டி’ என்கிற தெலுங்கு படத்தின் ரீமேக்தான் இது என்பதால், ஹீரோயினுக்கு வன்முறை இல்லை. கஷ்டமும் இல்லை!