திரைச்செய்திகள்
Typography

‘அறம்’ என்ற அற்புதமான படத்தை எடுத்தும் கூட, வாலறுந்த பட்டமாக அல்லாடிக் கொண்டிருக்கிறார் இயக்குனர் கோபி நைனார். இவர் அடுத்ததாக இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சித்தார்த் படம் இப்போது நடக்குமா என்கிற நிலைமை.

வொய்ப்பா வொய்? அதற்குள் சித்தார்த்தை சந்தித்த ஒரு சில கோள்மூட்டிகள், அறம் படமே கோபி நயினார் இயக்குனது இல்ல. அவருக்கு ஷாட் வைக்கக்கூட தெரியல என்றெல்லாம் போட்டுக் கொடுக்க... இருந்தாலும் இருக்கும் என்ற முடிவுக்கு வந்தாராம் சித்தார்த். ஒரு இயக்குனருக்கு தரப்படும் வலி இது என்பதையே மறந்த சித்தார்த், ‘ஸாரி, இந்த காம்பினேஷன் ஓவர்’ என்று கதவை அடைத்துவிட்டார். அறம் எனப்படுவது இதுவல்ல என்று சம்பந்தப்பட்டவர்களை வெட்கப்பட வைக்கும் விதத்தில் இன்னொரு படம் கொடுங்க கோபி!

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்