திரைச்செய்திகள்

தமிழினப் போராளிகளையெல்லாம் தனித்தனியாக பிரித்துவிட்டுவிட்டார்கள். ஆளுக்கொரு திசையில் கண்டிஷன் பைலில் கையெழுத்துப் போட கிளம்பியதால், போராட்டங்களெல்லாம் புஸ்சாகிவிடுகிற சூழல்.

இந்த நிலையில்தான் இயக்குனர் இமயம் பாரதிராஜாவை மத்திய அமைச்சர் ஒருவர் சந்தித்தாராம். “உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க. செஞ்சு தர சொல்றேன். எதுக்கு இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கறீங்க?” என்று தூபம் போட.... கையெடுத்து கும்பிட்டு அனுப்பி வைத்தாராம் அவர். பாரதிராஜா நடிப்பில் உருவான ‘ஓம்’ என்கிற படத்தின் ரிலீஸ் வேலைகள் ஸ்டார்ட் ஆகிவிட்டது. மத்திய அமைச்சரின் சந்திப்புக்கும், இந்த படத்தின் ரிலீசுக்கும் துளியும் சம்பந்தமில்லை!