திரைச்செய்திகள்
Typography

தெலுங்கு படவுலகத்தையே அந்தல சிந்தலயாக்கிவிட்டு தமிழ்நாட்டு பக்கம் கண் வைக்க ஆரம்பித்திருக்கிறார் ‘முரட்டுப் பூ’ ஸ்ரீரெட்டி! வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பயன்படுத்திக் கொண்டதாக அவர் குற்றம் சாட்டிய படா படா ஃபிகர் யார் தெரியுமா?

ஏ.ஆர்.முருகதாஸ்! ஸ்ரீரெட்டியின் பேஸ்புக் தகவல் வந்த அடுத்த நிமிஷமே அதை கோடம்பாக்கத்தில் ஷேர் செய்து கொண்டாடியது ஒரு கோஷ்டி. இதில் சற்றே மிரண்டு போன ஏ.ஆர்.முருதாஸ், இந்த நிமிஷம் வரைக்கும் தனது மொபைல் போனை ஆன் பண்ணவே இல்லை. அந்த கலவரம் இன்னும் ஓயவேயில்லை. அதற்குள் ‘ரோஜாக்கூட்டம்’ புகழ் ஸ்ரீகாந்தையும் வம்புக்கு இழுத்தார் ஸ்ரீரெட்டி. “என்னை ஐதராபாத் ஓட்டல்ல வச்சு....” என்று ஆரம்பித்து அதில் எழுதப்பட்டிருக்கும் மிச்சசொச்ச வார்த்தைகளை எழுதவே முடியாது. ரெட்டியின் அடுத்த இலக்கு எந்த பிரபலமோ? அரண்டு போயிருக்கிறது கோலிவுட்!

BLOG COMMENTS POWERED BY DISQUS