திரைச்செய்திகள்
Typography

ஆந்திராவில் வடை சுட்டுவிட்டு தமிழ்நாட்டில் பாயாசம் பரிமாற வந்திருக்கிறார் ஸ்ரீரெட்டி. நாளொரு நடுக்கமும் பொழுதொரு பிரச்சனையுமாக இவரை எதிர்கொள்கிறார்கள் இருமாநில ஜொள்ளர்களும். போம்மா... நீயும் உன் அக்கபோரும்.

எத்தனை பேர்ட்டதான் ஏமாறுவே? என்று அவரது பேஸ்புக்கில் அலட்சியம் காட்டும் ரசிகர்களுக்காக தன் உண்மையை சிலம்பு போல போட்டு உடைக்கப் போகிறாராம் ஸ்ரீரெட்டி. அதுவும் சென்னைக்கே வந்து. இங்கு ஒரு பிரஸ்மீட் வைக்கணும். என்னை கைட் பண்ணுங்க என்று அவர் கேட்டது ஒரு செய்தியாளரிடம். அவரது ஏற்பாட்டின் பேரில் முன்னணி சேனல்கள், மற்றும் யு ட்யூப் தளங்களில் ரெட்டியின் பேட்டிதான். இன்னும் என்னென்ன செய்யப் போறாரோ?

BLOG COMMENTS POWERED BY DISQUS