திரைச்செய்திகள்

ஒருவழியாக சிம்பு நடித்து கவுதம் மேனன் இயக்கி தயாரித்த ‘அச்சம் என்பது மடமையடா’ படம் திரைக்கு வந்துவிடும் போல் தெரிகிறது.

சிம்புவுக்கு சம்பள பாக்கி வைத்திருந்த கவுதம், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ‘சிம்பு ஷுட்டிங்குக்கு வரல... அதனால் படம் முடியாம கிடக்கு’ என்றெல்லாம் புலம்ப, கோபமான டி.ஆர், ‘சம்பளத்தை எண்ணி வைங்க. என் பையன் வருவான்’ என்று பேட்டியளித்துவிட்டார். அதற்கப்புறம் முகத்தை சுண்டைக்காய் போலாக்கிக் கொண்ட கவுதம், படத்தை கிடப்பில் போட்டுவிட்டு வேறு பட வேலைகளை பார்க்க கிளம்பிவிட்டார். இப்போது அந்த பஞ்சாயத்தில்தான் அதிரடி திருப்பம். ஐங்கரன் நிறுவனம், சம்பளத்தை நேரடியாக சிம்புவுக்கு செட்டில் பண்ண முன் வந்திருக்கிறதாம். ‘அவர் சொன்ன நேரத்துக்கு வருவார். நீங்க படத்தை முடிச்சுக் கொடுங்க. மொத்தமா ஒரு ரேட் பேசிக்கலாம்’ என்று ஐங்கரன் வந்ததால், ஏரியா சுறுசுறுப்பாகிவிட்டது. யானை விழுந்தால் கூட குனிந்து தூக்கதான் இங்கு ஏகப்பட்ட பொக்லைன்ஸ் இருக்கே? 

இவற்றையும் பார்வையிடுங்கள்

அட்டக்கத்தி தொடங்கி கபாலி வரை அட்டகாசமான மண்ணின் கதைகளைப் படமாகத் தந்தவர் பா.இரஞ்சித்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.