திரைச்செய்திகள்
Typography

சிவகார்த்திகேயனுடன் தொடர்ந்து மூன்று படங்களில் சேர்ந்து இயங்க அக்ரிமென்ட் இருந்தாலும், அதை கோபப்பட்டு கிழித்து எறிந்தவர் பசங்க பாண்டிராஜ். அதற்கப்புறம் சொல்லிக் கொள்ளும்படி வெற்றியை கொடுக்காதவருக்கு திடீர் மாஸ்! ‘கடைக்குட்டி சிங்கம்’ வெளியான நான்கு மாநிலங்களிலும் தாறுமாறு ஹிட். கலெக்ஷன் கொட்டோ கொட்டென கொட்டுகிறது.

எனக்கு உனக்கு என்று பாண்டிராஜை மொய்க்க ஆரம்பித்திருக்கிறார்கள் முன்னணி ஹீரோக்களும் தயாரிப்பாளர்களும். இவ்வளவு களேபரங்களுக்கு நடுவில் சிவாவிடமிருந்து ஒரு பொக்கே வந்ததாம். பிரிந்தவர்களை ஒட்டும் பெவிக்காலாக அந்த பொக்கே இருக்கக் கூடும் என்கிறது இன்டஸ்ட்ரி!

BLOG COMMENTS POWERED BY DISQUS