திரைச்செய்திகள்

தரமணி, தங்க மீன்கள் புகழ் ராம் இயக்கிய ‘பேரன்பு’ படம் விரைவில் திரைக்கு வரப்போகிறது. மாற்றுத் திறனாளி மகளை வைத்துக் கொண்டு ஒரு அப்பன் படுகிற சிரமம்தான் கதை.

கண்ணீர் மல்க வைக்கும் காவியமாக உருவாகியிருக்கும் இப்படத்தை, அண்மையில் இயக்குனர் பாரதிராஜா பார்த்தாராம். வெளியே வந்தவர் அப்படியே ராம் கைகளை பற்றிக் கொண்டு, ‘இது கை இல்லடா. உன் கால்’ என்று அதில் முகம் பதித்து கண்ணீர் கசிய, சுற்றியிருந்தவர்களுக்கும் நெகிழ்ச்சி. அவர் வாயிலிருந்து இப்படியொரு பாராட்டா? இதுவே பெரிய விருது என்று ராமை வாழ்த்தியிருக்கிறார்கள்.