திரைச்செய்திகள்
Typography

விஜய் சேதுபதி படங்களிலேயே அதிக செலவில் எடுக்கப்பட்ட படம் என்றால் ஜுங்காதான். தியேட்டருக்கு வந்த நிமிஷத்திலிருந்தே வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டிருந்தார்கள். ஏன்? கலைஞரின் உடல்நிலைதான்.

ஒருவேளை ஏதாவது அசம்பாவிதம் நடந்தால்? அவ்வளவு பணமும் அம்பேல்தான். எப்படியோ... தியேட்டர் வசூல் திக்கி திணறி முன்னேற்றத்தை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. அதைவிட பெரிய சந்தோஷம் இதுதான்.

அவர் படங்களிலேயே பெரிய வெற்றி பெற்ற தர்மதுரை, விக்ரம் வேதா படங்களை விட பெரிய விலைக்கு சாட்டிலைட் உரிமை விற்கப்பட்டுள்ளது. வாங்கிய நிறுவனம் ஜி தமிழ் தொலைக்காட்சி! எவ்வளவாம்? எட்டு கோடி! அட... அம்மாடி!!

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்