திரைச்செய்திகள்

விஜய் சேதுபதி நடித்த ‘ஜுங்கா’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் எந்த கேரக்டரிலும் நடிக்கவில்லை. ஆனால் விஜய் சேதுபதியின் காம்பவுன்டில் ஐஸுக்கும் முக்கிய இடம் இருக்கிறது.

அதை உறுதிபடுத்துவது போல அமைந்த விஷயம் ஒன்று. சமீபத்தில் இப்படத்தின் பிரிமியர் காட்சி வெளிநாட்டில் நடந்தது. இந்த படத்திற்கு துளியும் சம்பந்தமில்லாத ஐஸ்வர்யா ராஜேஷும் சென்றிருந்தார். பலரது கண்களையும் அவரது வரவு உறுத்தினாலும், தன் ஸ்பெஷல் புன்னகையால் எல்லாவற்றையும் மறக்கடித்தார் அவர். இதுதான்... இந்த சிரிப்புதான்...