திரைச்செய்திகள்

தமிழில் டயலாக் சொன்னால் தமிழில் புரிந்து கொண்டு பேசி நடிக்கிற ஹீரோயின்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

காஜல், சமந்தா, போன்ற முன்னணி ஹீரோயின்கள் இத்தனை வருடங்கள் தமிழில் நடித்துக் கொண்டிருந்தாலும் செட்டிலும் பிற இடங்களிலும் ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்கள். ஆனால் கீர்த்தி சுரேஷும், சாயிஷாவும் அப்படியல்ல.

தெரியாத தமிழைக் கூட வளைத்து நிமிர்த்தியாவது பேசி விடுகிறார்கள். “இன்னும் கொஞ்ச நாளில் நான் முழு நேரமும் தமிழில் பேச முயற்சிப்பேன். இப்ப என்ன வேணும்னாலும் கேளுங்க. முடிஞ்சவரை தமிழ்ல பேசுறேன்” என்று சவாலே விடுகிறார் சாயிஷா. அய்யன் திருவள்ளுவனே ஆகாயத்திலிருந்து பூ போடுவான்ம்மா!