திரைச்செய்திகள்

‘தனது பூர்வீகம் தமிழகம்தான். தானும் ஒரு தமிழன்தான்’ என்று நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார் ரஜினி.

கிருஷ்ணகிரியிலிருக்கும் ஒரு கிராமம்தான் அவர் பிறந்த ஊர் என்று பிரபல வார இதழ் சில வருடங்களுக்கு முன் ஒரு கட்டுரை எழுதியிருந்தது. அது பரவலாக மக்களுக்கு இன்னும் போய் சேரவில்லை. ஆனால் அதை பரவலாக சேர்த்தாக வேண்டுமே? அதற்காகதான் ஒரு வேலை நடக்கிறது.

அந்த கிராமத்தில் ரஜினியின் தாய் தந்தையருக்கு சிலை வடித்திருக்கிறார்கள். அதன் திறப்பு விழாவை பிரமாண்டமான விழாவாக நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார்கள். பல வருடங்களாகவே அங்குள்ள மக்கள், “எங்க ஊருக்கு ரஜினி வருவாராங்க?” என்று கேட்டு வந்தார்கள்.

இப்போது அந்த புண்ணிய பூமியில் தன் காலடியை வைக்க சம்மதித்திருக்கிறாராம் ரஜினி. அது இந்த சிலைகளின் திறப்பு விழா நாளாக இருக்கலாம்.