திரைச்செய்திகள்
Typography

சென்சார் போர்டில் சர்டிபிகேட் மறுக்கப்பட்டால் கவலைதானே வரும்? பயங்கர குஷி மூடில் இருக்கிறது ஒரு படம்.

‘சிவா மனசுல புஷ்பா’தான் அப்படம். வாராகி என்பவர் இயக்கி தயாரித்திருக்கும் அப்படம், பொலிட்டிக்கல் சட்டையர் என்கிறார்கள்.

இந்த படத்தின் தலைப்பு, மற்றும் சில காட்சிகளுக்கு கட் கொடுத்துவிட்டது சென்சார்.

ரிவைசிங் கமிட்டிக்கு போனால், அங்கு இதைவிட பெரிய கட்.

டெல்லிக்கு போனால் இன்னும் பெரிய வெட்டு.

இப்படி நாலாபுறமும் பொசுக்கப்பட்டாலும், ‘நல்ல விளம்பரம் கொடுக்குறாங்க’ என்று சந்தோஷப்படுகிறார் வாராகி.

குடிசையே எரிஞ்சாலும், குளிருக்கு இதமா இருக்கு என்கிற ஆள் போலிருக்கு!

BLOG COMMENTS POWERED BY DISQUS