திரைச்செய்திகள்

கருணாநிதியின் மரண செய்தி வரும் வரை சினிமாக்காரர்கள் பலரும் திருடனுக்கு தேள் கொட்டியது போலவே திரிந்தார்கள்.

ஏன்? தங்கள் பட விழாக்களை பிரமாண்டமாக கொண்டாடவும் முடிவதில்லை. கொண்டாடாமல் இருக்கவும் முடிவதில்லை.

அண்மையில் சிவகார்த்திகேயன் நடித்த ‘சீமராஜா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா மதுரையில் நடந்தது.

பொதுவாக சிவகார்த்திகேயன் பட விழாக்கள் என்றால், இன்டஸ்ட்ரியை கூட்டி மேளதாளப் படுத்திவிடுவார்கள்.

இந்த முறை கொஞ்சம் அடக்கியே வாசித்தார்கள். பா.விஜய் தன் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு தேதி குறித்து அழைப்பிதழ் அடித்து ரத்து செய்தார்.

அதே போல ‘ஆண்தேவதை’ என்றொரு படத்திற்கு சுமார் 500 ரூபாய் பெறுமானத்தில் கிராண்ட் இன்விடேஷன் அடித்தார்கள். கடைசியில் விழாவே ரத்து. சினிமாவுக்கு எவ்வளவோ செய்தார் கருணாநிதி. சினிமா அவருக்கு இதுவாவது செய்யட்டுமே!