திரைச்செய்திகள்
Typography

செம டோஸ் விட்டிருக்கிறார் பாலா. யாரை? எதற்காக? விக்ரமின் மகன் துருவ் டிரங் அண் டிரைவ் கேஸில் சிக்கியதோடல்லாமல் மூன்று ஆட்டோக்காரர்களை காயப்படுத்தி சில வாகனங்களையும் சேதப்படுத்தினாரல்லவா?

அதற்காக! அவ்வளவு பொதுநலப் பற்றா என்ன? மண்ணாங்கட்டி... இது பொதுநலத்தில் சுயநலம். அதற்கப்புறம் அர்ச்சனையில் சிந்திய வார்த்தைகள்தான் அகப்பொருள்! “ஏன்ப்பா... ஷுட்டிங் போயிட்டு இருக்கு. நீ பாட்டுக்கு மூஞ்சை கிழிச்சுட்டு வந்து நின்னா என்னாவறது?” என்றாராம். இவ்வளவு திட்டித் தீர்த்தாலும், தம்பியை சேதாரமில்லாமல் வெளியே கொண்டு வந்ததில் பாலாவின் பங்கும் அதிகம் என்கிறார்கள். பரமா... பாதசாரிகளுக்கு பாதுகாப்புக் கொடு!

BLOG COMMENTS POWERED BY DISQUS