திரைச்செய்திகள்
Typography

அஜீத் தரப்போ, அல்லது அஜீத்தோ வாயை திறந்தால்தான் அவரது அடுத்தப்பட செய்தியில் ஒரு அதிகாரபூர்வ நகர்வு இருக்கும். இருந்தாலும், இப்போதைய செய்தி கிட்டதட்ட சரி. சதுரங்க வேட்டை விநோத் இயக்குகிற படத்தில் அஜீத் நடிப்பதாக இருந்ததல்லவா? உங்க படத்தில் நான் கட்டாயம் நடிக்கிறேன்.

அதுக்கு நடுவுல இன்னொரு படத்தில் நடிச்சுட்டு வந்திடுறேன் என்று கூறிவிட்டாராம். அந்த இன்னொரு படம் எது? யார் இயக்குனர் என்பதில்தான் படு குழப்பம். கழட்டி விடப்பட்ட விநோத் மட்டும் சேஃப்டியாக விக்ரம் பக்கம் ஒதுங்கிவிட்டார். ஆர்வத்தோடு வந்து கதை சொன்ன விநோத்தை ஆரத்தழுவி ஆதரித்திருக்கிறார் விக்ரம். தீரன் அதிகாரம் ரெண்டா இருக்குமோ?

BLOG COMMENTS POWERED BY DISQUS