திரைச்செய்திகள்
Typography

கலைஞர் கருணாநிதியின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட திரைப்பட நட்சத்திரங்கள் பலர் சேதாரமில்லாமல் தப்பி வந்ததே பெரும்பாடு ஆகிவிட்டது.

மனோரமாவின் இறுதி சடங்குக்கு வந்து படாதபாடு பட்ட அஜீத், அதையே மோசமான அனுபவமாக எடுத்துக் கொண்டதால், கூட்டம் சேர்வதற்கு முன்பே ராஜாஜி ஹாலுக்கு வந்து வணங்கிவிட்டு புறப்பட்டார். கடைசி வரை விஜய் வரவில்லையே என்று கண்மேல் கண் வைத்து காத்திருந்த ரசிகர்களுக்கு மட்டும் ஏமாற்றம். அவர் அமெரிக்காவில் படப்பிடிப்பில் இருந்தார். ஆனால் மறுநாளே புறப்பட்டு சென்னைக்கு வந்து சேர்ந்தார். த்ரிஷா கலைஞரின் நினைவிடத்திற்கு மறுநாள் சென்று அஞ்சலி செலுத்தினார். நயன்தாராவும் கூட்டமில்லாத நேரத்தில் செல்வதாக கூறியிருக்கிறாராம். கூட்டம் கலையுமா? என்று காத்திருக்கிறது அவரது ஸ்பை பிரிவு!

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்