திரைச்செய்திகள்
Typography

பிள்ளையார் சுழி போடும்போதே ஒரு ‘தொல்லை’யார் சுழியையும் போட்டுவிடுகிறது சுச்சுவேஷன்.

முன்னாள் முதல்வர் ஜெ.வின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கப் போவதாக மூன்று பேர் கிளம்பியிருக்கிறார்கள். அவர்களில் பாரதிராஜாவும், ஏ.எல்.விஜய்யும் முக்கியமானவர்கள். அதிலும் விஜய், முன்னணி இந்திப்பட நிறுவனம் ஒன்றில் ஒப்பந்தமே போட்டுவிட்டார். இந்த நேரத்தில்தான் அந்த அதிர்ச்சி. ஜெ.வின் அண்ணன் மகன் தீபக் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். “என் அனுமதி இல்லாமல் யார் படம் எடுக்க நினைத்தாலும் அது நடக்காது. நான் கோர்ட்டுக்கு போவேன்” என்பதுதான் ஷாக். இன்னும் யார் யாரெல்லாம் குறுக்கே வருவார்களோ? அம்மான்னா சும்மாயில்லடா!

BLOG COMMENTS POWERED BY DISQUS