திரைச்செய்திகள்
Typography

‘அறம்’ படத்தில் அந்த இயக்குனர் கோபி நயினாருக்கு நடந்த கஷ்டம்தான் ‘கோ.கோ’ படத்தின் இயக்குனர் நெல்சனுக்கும் நடந்திருக்கிறது.

யெஸ்... படமெல்லாம் முடிந்தபின், அதில் கையை வைக்கிறேன் பேர்வழி என்று கசக்கி போட்டிருக்கிறார் நயன்தாராவின் வருங்காலம் மிஸ்டர் விக்னேஷ் சிவன். எப்படி கோபி பொறுத்துக் கொண்டாரோ, அதைவிட பொறுமையாக இருந்தாராம் நெல்சனும்.

ஏன்? சட்டி சூடாக நேரத்தில் எதற்கு விறகை இழுப்பானேன்? என்கிற ஜாக்கிரதை உணர்வுதான். அதிகாரமாக தலையை நுழைத்த விக்னேஷ் சிவன், படத்தின் பல காட்சிகளை வெட்டி எறிந்ததுடன் எடிட்டிங் ஆர்டரையே மாற்றி வேறொன்றாக செய்திருக்கிறார்.

அதுமட்டுமல்ல... பிரமோஷன் சாங் என்று தனியாக ஒன்றை படம் பிடித்திருக்கிறார். அதற்கு படத்தின் இயக்குனர் நெல்சன் செல்லவே இல்லை என்பதுதான் ஐயகோ! திரைக்கு வந்திருக்கும் கோ கோ நெல்சனின் அறிவால் ஜெயிக்குமா, விக்னேஷ் சிவனின் அறிவால் தோற்குமா? பார்க்கலாம்

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்