திரைச்செய்திகள்

சிவகார்த்திகேயனை தனது ‘மெரீனா’ படத்தில் அறிமுகப்படுத்தியது பசங்க பாண்டிராஜ்தான்.

அந்த நேரத்தில் ஏதோவொரு உந்துதல் வர, மூன்று படங்கள் தனக்கு கால்ஷீட் தர வேண்டும் என்று அக்ரிமென்ட்டில் சைன் வாங்கிவிட்டார் பாண்டி. காலம் படக்கென்று சிவகார்த்தியை உச்சாணிக்கொம்பில் வைத்துவிட்டது.

மூன்று பட கால்ஷீட் அக்ரிமென்ட் இருக்கே? நெருக்கிய பாண்டிக்கு சிவா சைடில் மிளகாய் பொடியே பொட்லமாக கிடைக்க... போய்யா நீயும் உன் அக்ரிமென்ட்டும் என்று அந்த பேப்பரை அவருக்கு எதிரிலேயே கிழித்துப் போட்டுவிட்டார் பாண்டிராஜ்.

கட்...! விழாக்களில் பார்க்கிற நேரத்தில் மட்டுமே சிரித்து பேசிவந்த இவர்களுக்குள் இப்போது செம மாற்றம். பாண்டி இயக்கத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறாராம் சிவா. ஏன்? ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் கன்னாபின்னா கலெக்ஷன்தான்!