திரைச்செய்திகள்
Typography

அஜீத் விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு மட்டுமே ஏற்பாடு செய்யப்படும் அதிகாலை ஷோக்கள், கடந்த சில வாரங்களாக உல்டாவாகிப் போயிருக்கிறது.

‘இருட்டறையில் முரட்டுக்குத்து’ படத்திற்கும் கூட அதிகாலை 5 மணி ஷோ இருந்தது.

ஆச்சர்யம் என்னவென்றால் அது ஃபுல்! அந்த வகையில் சமீபத்தில் வெளியான கோலமாவு கோகிலா படத்திற்கும் சென்னையில் பல்வேறு தியேட்டர்களில் அதிகாலை ஷோ ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டம் வழிந்திருக்குமே? மண்ணாங்கட்டி! சொல்லி வைத்தார் போல எல்லா தியேட்டர்களுமே காற்றாடியது.

சில தியேட்டர்கள் மட்டும் அரை சதம் நிரம்பியது. கேள்விப்பட்ட நயன், படு பயங்கர அப்செட்! டூரிங் டாக்கீஸ் கொண்டையில எதுக்கும்மா இடிதாங்கியெல்லாம்? முதல்ல கீழே இறங்கி வாங்க!

 

BLOG COMMENTS POWERED BY DISQUS