திரைச்செய்திகள்
Typography

மன்மதன் பார்ட் 2 எடுக்கலாமா என்று யோசிக்க ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்கம்.

சுமார் 14 வருடங்கள் எங்கிருக்கிறார் என்பதே தெரியாமலிருந்த அப்படத்தின் இயக்குனர் முருகனை தேடிப்பிடித்து அழைத்து வந்தார் தயாரிப்பாளர் கஸாலி. ‘மன்மதன் பார்ட் 2’ என்றே விளம்பரப்படுத்தவும் ஒரு வாய்ப்பு.

சிம்புவுக்கு பதிலாக விமல் என்று முடிவாகி படப்பிடிப்புக்கு தயாராகிற நேரம் பார்த்து கவிழ்த்து விட்டுவிட்டார் முருகன். என்னாச்சு? பேசிய சம்பளத்தை விட மேலும் ஒரு மடங்கு கேட்க, புராஜக்டே குப்பையில்! “சிம்புவே திருந்திட்டாரு. அவரை வச்சு படம் எடுத்த இந்த முருகன் திருந்தலையே? இன்னும் 14 வருஷம் கஷ்டப்படுங்க தம்பி” என்று ஆசிர்வதித்து அனுப்பினாராம் கஸாலி.

BLOG COMMENTS POWERED BY DISQUS