திரைச்செய்திகள்
Typography

‘வாலு’ ரிலீஸ் நேரத்தில் பஞ்சாயத்து கூடியது. இரண்டரை கோடி இருந்தால்தான் படத்தை வெளியிட முடியும் என்கிற நிலைமை.

கவலை நிரம்பிய கண்களுடன் கை நீட்டிய டி.ஆருக்கு கடன் கொடுத்து உதவினார் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம். வாங்கிய அந்த நிமிஷமே அதை மறந்துவிட்டார் டி.ஆர். நடுவில் பலமுறை போன் செய்தும் டி.ஆரை ரீச் பண்ணவே முடியவில்லை திருப்பூராருக்கு.

இப்போது ‘செக்கச் சிவந்த வானம்’ படம் வெளியாகிற நேரத்தில் செக் வைத்துவிட்டார் மனுஷன். அந்த பணத்தை மூணு பைசா வட்டியோடு செட்டில் செய்தால் மட்டுமே வானத்திற்கு வழி கிடைக்கும் போலிருக்கிறது. இப்போது மாறி மாறி போன் அடிக்கிறாராம் டி.ஆர். சுப்புணி எடுக்கணுமே?

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்