திரைச்செய்திகள்
Typography

சிங்கிளா வந்து சிங்கம் போல உறுமிய சிவகார்த்திகேயன் படங்களுக்கு எப்பவுமே அள்ளிக் கொடுத்து ஆனந்தப்பட்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

கூட்டமா வர்றதை விட, தனியா வருவதே ஹிட் சூட்சுமம் என்பதை அறிந்திருக்கும் அவர், பல மாதங்களுக்கு முன்பே தன் படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்து அறிவிக்கவும் செய்வார்.

ஆனால் இந்த முறை சோதனை. ஆனால் வந்த சோதனை பனிப்போல விலகியது. இவரது ‘சீமராஜா’ படம் செப்டம்பர் 13 ரிலீஸ் என்று அறிவித்து அதை நோக்கி நகர்ந்தால், குறுக்கே விழ நினைத்தது குச்சியும் மிட்டாயும்.

அதே நாளில் விக்ரமின் சாமி2 ம், அரவிந்த்சாமியின் நரகாசுரனும் ரிலீஸ் செய்வது என்று கிளம்பிவிட்டார்கள். சும்மாயிருக்குமா இன்டஸ்ட்ரி. எதுக்கு ஆளாளுக்கு ஒரே நேரத்தில் வந்து வீணாப்போறீங்க என்று அட்வைசித்த தயாரிப்பாளர் சங்கம், சிவகார்த்திக்கு இணக்கமான முடிவை எடுத்திருக்கிறது.

இவ்விரு படங்களும் கடைசி நேரத்தில் தள்ளிப் போய்விட்டன. தப்பிச்சது சிவகார்த்திகேயனா, விக்ரமா, அரவிந்த்சாமியா?

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்