திரைச்செய்திகள்

சிம்புவின் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் நயன்தாரா. ஏன்? கரெக்டாக அவர் நடித்த ‘கோலமாவு கோகிலா’ வெளியாகிற சில நாட்களுக்கு முன், ‘வல்லவன்’ படத்தின் போது நயன்தாராவின் உதட்டை கடித்த சம்பவத்தை பற்றி பேசி பரபரப்பாக்கினார்.

அது நடந்து பல வருஷங்கள் ஆகிவிட்டது. நயன்தாராவிற்கென்று தனி இமேஜும் தனி ரசிகர் கூட்டமும் உருவாகிவிட்டது. இந்த நேரத்தில் இவர் ஏன் அந்த பழைய முத்தத்தை பற்றி பேசணும்? அதிருக்கட்டும்... ‘கோலமாவு கோகிலா’ படத்தை தன் நண்பர்கள் புடை சூழ போய் பார்த்து ரசித்திருக்கிறார் சிம்பு.

‘நான் நடிச்சு பாதியில் டிராப் ஆன ‘வேட்டை மன்னன்’ படத்தின் இயக்குனர்தான் கோ.கோ படத்தின் இயக்குனர் நெல்சன். அந்த பையனுக்காகதான் நான் தியேட்டருக்குப் போய் இந்தப்படத்தை பார்த்தேன்’ என்று சிம்பு சொல்வதை நம்பிதான் ஆக வேண்டும். ஏன்? நம்புற மாதிரியே சொல்றாரே!