திரைச்செய்திகள்
Typography

நயன்தாரா, ஹன்சிகா என்று அன்றைய டாப் ஹீரோயின்களுடன் நடித்து வந்த உதயநிதி அதற்கப்புறம் என்ன காரணத்தினாலோ அவ்வளவு ‘வொர்த்’ ஆன ஹீரோயின்களுடன் நடிக்காமல் இருந்தார். ஆனால் கழக கண்மணிகள் பலரும் அவருக்கு கடிதம் வாயிலாக ஒரு வேண்டுகோள் வைத்தார்களாம்.

‘அண்ணே... திரும்பவும் நயன்தாரா கூட ஜோடி போடுங்க’ என்பதுதான் அது. அந்த ஆசை அவருக்கும் இருக்கிறது. ஆனால் மீண்டும் அதிகம் அறிமுகமில்லாத ஹீரோயின்தான் உதயநிதிக்கு வாய்த்திருக்கிறார். மிஷ்கின் இயக்கத்தில் இவர் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் ஹீரோயின் அதிதி ராவ். இவர் மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ படத்தில் நடித்தவர். மீண்டும் கடிதப்போர் நடத்துங்க கண்மணிகளே...

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்