திரைச்செய்திகள்

வாக்கு கொடுப்பதை ஏதோ பாக்கு கொடுப்பது போல அலட்சியப்படுத்தும் நடிகர்களுக்கு மத்தியில் விஜய் சேதுபதி கிரேட்தான்!

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் அவருக்கு திடீர் பணத்தேவை. கே புரடக்ஷன்ஸ் நிறுவனம் 50 லட்சத்தை சம்பளமாக நிர்ணியித்து அவருக்கு கொடுக்க, அதே சம்பளத்திற்கு படம் நடித்து தருவதாக வாக்குக் கொடுத்தார். இப்போது எட்டு கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் அவர், ஒரு பைசா எக்ஸ்ட்ரா கேட்காமல் அப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவரை வைத்து சேதுபதி என்ற படத்தை இயக்கிய அருண் என்பவர்தான் இப்படத்தையும் இயக்கி வருகிறார். சேதுபதி ஷுட்டிங் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிக்காகவும்தான் இந்த கால்ஷீட்.