திரைச்செய்திகள்

சில தினங்களுக்கு முன் திரைக்கு வந்த... (ஒரு வழியாக போராடி வந்த என்றும் வாசிக்கலாம்) இமைக்கா நொடிகள் படம், முதல் நாள் எந்த தியேட்டரிலும் வெளியாகவில்லை.

ஏன்? சுமார் நான்கு கோடி டெபிசிட். எப்படி எப்படியோ சமாளித்து முன்னேறியவர்களுக்கு கடைசி நேரத்தில் ஒன்றரை கோடி செட்டில்மென்ட் செய்வதில்தான் அநியாயத்துக்கு அவஸ்தை.

படத்தின் ஹீரோயின் நயன்தாரா இப்படத்திற்காக மூன்று கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார்.

அவரிடம் ஏதாவது தேறுமா என்று போன் போட்டால், எதிர்முனை கொர்....ர் என்றதாம்! ஏன்? ஏற்கனவே வர வேண்டிய 75 லட்சத்தை கேட்காமலேயே விட்டுவிட்டார்.

அதற்கு மேலும் கையிலிருந்து கேட்டால் எந்த ஹீரோயின்தான் சம்மதிப்பார்? இவ்வளவு துயரத்திலும் ஒரு நற்செய்தி. தமிழகத்தைவிட கேரளாவில் நல்ல வசூல்.

ஏன்யா... வெள்ளம் வந்தாலும் படம் பார்க்கறத நிறுத்த மாட்டீங்களா?