அகல கால் வைத்தால் அண்ட்ராயரில் தையல் விடும் என்பதை அறிந்தே வைத்திருக்கிறது ஏ.ஜி.எஸ் நிறுவனம்.
ஆனாலும், கால் சும்மாயிருக்குமா? கண்டபடி நீள ஆரம்பித்துவிட்டது. விஜய் அட்லீ இணையும் புதிய படத்தை இந்த நிறுவனம்தான் தயாரிக்கிறது.
விஜய்யின் சம்பளமே கிட்டதட்ட ஐம்பது கோடி என்கிறார்கள்.
அட்லீ சம்பளமும் அதிகத்திலும் அதிகம்.
இது போக அவர் எவ்வளவு செலவை இழுத்துவிடுவார் என்பதை காலம்தான் முடிவு செய்யும்.
இந்த நேரத்தில்தான் தனி ஒருவன் பார்ட் 2 படத்தையும் தயாரிக்கப் போகிறது ஏ.எஜி.எஸ்.
பார்ட் 1 சமயத்திலேயே அதிக செலவை இழுத்துவிட்டதாக மூக்கை உறிஞ்சிக் கொண்டிருந்தார்கள்.
இப்போது பார்ட் 2 வை எப்படி ஹேண்டில் பண்ணுவார் மோகன் ராஜா?
சற்றே உஷாரான ஏ.ஜி.எஸ், ‘இதை முதல் பிரதி அடிப்படையிலே பண்ணுங்களேன்’ என்று வற்புறுத்துகிறதாம்.
முடிவு தெரிவதே இழுபறியாகிக் கிடக்கிறது.