திரைச்செய்திகள்

ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ், ஐம்பதுக்கும் மேற்பட்ட உதவி இயக்குனர்களை இயக்குனராக்கி பெருமைபடுத்தியிருக்கிறது.

அதுமட்டுமல்ல... அந்த நிறுவனம் தந்த ஹிட்டுகளால் முன்னணி ஹீரோ ஆனவர்கள் அநேகம் பேர். அதில் விஜய்யும் ஒருவர். அப்படியிருக்க... அவருக்கும் கடமை இருக்கிறதல்லவா?

இந்த நிறுவனத்தின் 100 வது படத்தில் நடிக்கக் கேட்டு வந்தாராம் ஆர்.பி.சவுத்ரி. வந்த இடத்தில்தான் அவருக்கு விஜய் வாங்குகிற ஐம்பது கோடி சம்பள விபரம் சொல்லப்பட்டதாம்.

இருவருக்கும் இந்த டீல் பிடித்திருந்தால், ‘சூப்பர்(ங்க) குட்’ என்று ரசிகர்கள்  பாராட்டுகிற அளவுக்கு ஒரு முடிவு வாய்க்கும். இல்லையென்றால்? சவுத்ரியின் லிஸ்ட்டில் வேறு யார் இருக்கிறாரோ?