திரைச்செய்திகள்
Typography

பெரிய வெற்றிகளை கொடுத்த டைரக்டர் இல்லை வெங்கட் பிரபு.

ஆனால் அவர் தற்போது இயக்கத் தயாராகிக் கொண்டிருக்கும் ‘மாநாடு’ படத்திற்காக வாங்கிய சம்பளம் நாலரை கோடி ரூபாய்.

அது மட்டுமல்ல, மொழி மாற்று உரிமையில் நாற்பது சதவீத கமிஷன் மற்றும் கதை எழுதுவதற்காக நட்சத்திர ஓட்டல் என்று அமர்க்களப்படுத்திவிட்டார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

‘இதெல்லாம் ரொம்ப ஓவர்ங்க. ஏன் அவரை இப்படி அதிக சம்பளம் கொடுத்து வளர்த்துவிடுறீங்க?’ என்றெல்லாம் சக தயாரிப்பாளர்கள் நெருக்குகிறார்கள்.

அவர்களுக்கெல்லாம் அவர் பதில் சொல்கிறாரோ, இல்லையோ? நாம் விசாரித்த வரையில் செம பதில் ஒன்று இருக்கிறது. அது இதுதான்.

“அந்த நட்சத்திர ஓட்டலில் அவரும் அவரது குழுவும் அடிக்கும் ‘தண்ணி’ செலவு மட்டும் சுரேஷ் காமாட்சியுடையது இல்லையே, அதுக்கென்ன சொல்றீங்க?” நல்லா சொல்றாங்கப்பா டீட்டெயிலு!

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்