திரைச்செய்திகள்
Typography

தைலம் தீர்ந்தாலும் தலைவலி தீராத நிலையில்தான் இருக்கிறது இந்த லிங்கா விவகாரம். கபாலி ரிலீசின் போது அமைதியாக இருந்த சிலர், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் லிங்கா தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஆசிர்வாதத்தோடு வரும் ‘முடிஞ்சா இவன புடி’ படத்தின் கழுத்தில் கத்தியை வைத்துவிட்டார்கள்.

மிச்ச சொச்ச பாக்கியை கொடுத்துட்டு படத்தை ரிலீஸ் பண்ணுங்க என்று கூற, பணத்தை வாங்க வேண்டிய வேந்தர் மூவிஸ் மதன்தான் ஊரிலியே இல்லையே? பிறகு யாரிடம் கொடுத்து எப்படி பைசல் செய்ய? விநியோகஸ்தர் சங்க தலைவர் டி.அருள்பதியின் கெடுபிடிக்கு அஞ்சிய மு.இ.பு தயாரிப்பாளர் அவர் மீது பதினேழு கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுக்கப் போவதாக அறிவித்துவிட்டார்.

எப்படியோ... கடைசி நேரத்தில் தலையிட்ட ரஜினி, கே.எஸ்.ரவிகுமாரிடமும், தாணுவிடமும், பிரச்சனையை முடிங்க என்று கேட்டுக் கொண்டாராம். அதற்கப்புறம் விடிய விடிய பேசி, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தார்கள். சொன்ன தேதியில் முடிஞ்சா இவன புடி ரிலீஸ். இனிமேலாவது ரஜினி தலையை உருட்றதை விடுவாங்களா?

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்