திரைச்செய்திகள்
Typography

வரவர ஏமாந்த சோணகிரி ஆகிக் கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி.

ஆரஞ்சு மிட்டாய் படத்தில் சம்பாதித்ததை விட ஆரம்பித்தார். அதுவாவது சொந்தப்படம். ஆனால் தான் வேறொரு தயாரிப்பாளருக்கு நடித்த படத்திற்காகவெல்லாம் வாங்கிய சம்பளத்தை விட்டுத்தர ஆரம்பித்திருக்கிறார்.

கத்திசண்டை படக் கடனை அடைக்க முடியாத தயாரிப்பாளர் நந்தகோபால், 96 படத்தின் மீது அதை ஏற்றிவிட்டார்.

கடைசி நேரத்தில் 96 பலமாக சிக்கிக் கொண்டது.

படம் வெளியாக வேண்டுமே? தனது முழு சம்பளத்தை விட்டுக் கொடுத்ததுடன், மேலும் ஒன்றரை கோடி கடன் பத்திரத்தில் கையெழுத்து போட்டிருக்கிறார் வி.சே.

ஆஹா... அலுங்காமல் குலுங்காமல் நமக்கு ஒரு ‘ஸ்மைல் மவுத்தன்’ கிடைத்திருக்கிறாரே என்று ஆளாளுக்கு பிழியக் கிளம்பிராதீங்க...என்று விஜய் சேதுபதியின் நலன் விரும்பிகள் பிரார்த்திக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்