திரைச்செய்திகள்

ஒரு படம் எடுத்து அதை ரிலீஸ் பண்ணுவதற்குள் சங்கு இளைத்து சோழியாகிவிடும் அபாயம் இருக்கிறது.

விக்ரம் பிரபு நடித்து திரைக்கு வந்திருக்கும் வாகா படத்திற்கும் ஏகப்பட்ட பஞ்சாயத்து. விடிய விடிய பேசி கடைசியில் பைசல் பண்ண வேண்டிய பணத்திற்கு விக்ரம் பிரபுவின் சம்பளத்தில் கை வைத்துவிட்டார்களாம். கிட்டதட்ட ஒரு கோடி ரூபாய் சம்பளத்தை அவர் விட்டுக் கொடுத்ததாக தகவல். படம் முழுக்க காஷ்மீர் எல்லையில் கவிழ்ந்து புரண்டவருக்கு எக்ஸ்ட்ரா கொடுப்பாங்கன்னு பார்த்தா, இப்படி பாக்கெட்லேர்ந்து உருவிட்டாங்களே?