திரைச்செய்திகள்

சாந்த சொரூபிணி, சாமுண்டீஸ்வரி ஆனது யாரால், எதனால்?

இதுதான் இப்போது கோடம்பாக்கத்தின் பெரும் கேள்வியாக இருக்கிறது. தொழிலாளர்களிடமும், பணியாளர்களிடமும் அன்பும் பண்புமாக நடந்து கொள்ளும் வழக்கமுடைய நயன்தாரா, இப்போதெல்லாம் அநியாயத்துக்கு கோபப்படுகிறாராம். கையில் கிடைத்ததை எடுத்து படீர் திடீரென அவர் வீசுவதால், ஓட்டல் அறைகளில் கண்ணாடி, பிரிட்ஜ் போன்ற ஐட்டங்களுக்கு ஆபத்து நேர்ந்து விடுகிறதாம்.

நயன்தாராவுக்கு ரூம் தராதீங்க என்கிற அளவுக்கு ஆந்திராவில் அவரது புகழ் பரவிக் கிடக்கிறது. அப்படியே அது தமிழ்நாட்டுக்கும் பரவி, நயன்தாராவுக்கு ரூம் என்று சினிமா கம்பெனிகள் கேட்க ஆரம்பித்தால் போதும்... காஷன் டெபாசிட் கட்டுங்க என்கிறார்களாம் ஸ்டார் ஓட்டல்களில். வாங்குன நல்ல பெயரையெல்லாம் இப்படி தேங்குன குட்டையில போட்டு முக்கிட்டீங்களே மோகினியக்கா!