திரைச்செய்திகள்

அடிக்கடி வெளிநாட்டுக்கு கிளம்பிவிடுகிறார் அதர்வா. கேட்டால், பிசினஸ் என்கிறாராம்.

தமிழ்சினிமாவில் முழு நேர ஹீரோவாக இருக்கிற அவர், தனக்கு வரும் படங்களையும் படம் சம்பந்தமான அணுகுமுறைகளையும் புறக்கணித்துவிட்டு இப்படி பாதி நேரம் இங்கும் அங்கும் சுற்றி வருவதை சற்றே கவலையோடு கவனிக்கிறது கோடம்பாக்கம். அட்வைஸ் செய்கிற யாரையும் பக்கத்தில் அனுமதிக்காத அதர்வா, தானுண்டு தன் போக்குண்டு என்று இருப்பதுதான் ஷாக். ஹிட்டுக்காக அலைகிற நடிகர்கள் மத்தியில், துட்டுக்காக கூட கதை கேட்காத அதர்வாவை என்ன செய்வது? ஸோ சேட்!