திரைச்செய்திகள்

தனக்கு பிடிக்காத கேரக்டர்கள் மட்டுமல்ல, படத்தில் தனக்கு முக்கியத்துவம் இல்லையென்றால் கூட அது எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் சேர்ந்து நடிக்க மறுத்துவிடுவார் நயன்தாரா.

தெலுங்கில் படா படா ஹீரோக்களுக்கே இந்த பயமுறுத்தலை காட்டியவர் அவர். அப்படியிருக்க... விஜய் அட்லீ இணையும் படத்தில் பணத்திற்காக ஒப்புக் கொள்வாரா? “முதலில் கதையை சொல்லுங்க அட்லீ, பிடிச்சிருந்தா சம்பளம் பேசலாம்” என்றாராம். இத்தனைக்கும் அட்லீயும் நயன்தாராவும் குடும்பமாக பழகிவருகிறார்கள். சொன்னபடியே கதையை கேட்டபின் சந்தோஷப்பட்டிருக்கிறார். இருந்தாலும், ஆறு கோடிக்கு ஆறு பைசா கம்மி என்றாலும் நோ கால்ஷீட் என்று கூறிவிட்டாராம். முந்தைய படத்தை விட இது இரண்டு கோடி அதிகம் என்றாலும் கொட்டிக் கொடுக்க முன் வந்ததாம் தயாரிப்பு நிறுவனம்.