திரைச்செய்திகள்

கபாலி வந்தால் போதும். கார தோசை இனிப்பாகிவிடும் என்று கணக்குப் போட்ட தன்ஷிகாவுக்கு, ஒரு சுவையும் தென்படவில்லை.

கபாலி ரிலீஸ் ஆன கையோடு இன்டஸ்ட்ரி பிரமுகர்கள் சிலர் போன் பண்ணி ஆஹா ஓஹோ என்று பாராட்டியதோடு சரி. அவரது ஆக்ஷன் அவதாரத்திற்கு ஏற்றார் போல அடுத்தடுத்த படங்கள் எதுவும் வீடு தேடி வந்த பாடில்லை. பெரிய கம்பெனி படங்களில், பெரிய ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு வரும் என்று காத்திருந்தால், சின்ன சின்ன உப்புமா கம்பெனிகளில் இருந்துதான் அழைப்பு வருகிறதாம். இருந்தாலும், உறுமீன் வரும் வரைக்கும் கொக்கு வயிறு குலை பட்டினி என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் தன்ஷிகா. தாப்பான்னு நினைச்சு திறக்கறதா, போப்பான்னு அடிச்சு விரட்டுறதா? தன்ஷிகா விஷயத்தில் ஒண்ணுமே புரியாம முழிக்குதே இன்டஸ்ட்ரி?