திரைச்செய்திகள்
Typography

பெரிய நடிகர்களுக்கு இருக்க வேண்டிய பொறுப்பு எது தெரியுமா?

நான் யாரையும் குழப்ப மாட்டேன் என்பதுதான். எந்த பெரிய படம் வந்தாலும், அல்சேஷனை பார்த்த நாட்டு நாய் மாதிரி பம்மும் சின்னப்படங்கள், பெரிய படங்களுக்கேற்ப தனது ரிலீஸ் தேதியை மாற்றிக் கொண்டே வரும். ஒரு கட்டத்தில் பெரிய படமும் சொன்ன நேரத்திற்கு வராமல், சின்னப்படத்திற்கும் தியேட்டர் கிடைக்காமல் போய்விடும். ஆனால் எல்லா காலத்திலும் வயிற்று வலி என்னவோ, சின்னப்படங்களுக்குதான். இதையெல்லாம் அலசி ஆராய்ந்த சில பெரிய நடிகர்கள் பல வாரங்கள் முன் கூட்டியே, இந்த தேதியில்தான் என் படம் வரும் என்பதை சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த ஆரோக்கியமான அணுகுமுறைக்கு ஒரு சபாஷ். ரெமோ படத்தின் ரிலீஸ் தேதியை பல வாரங்களுக்கு முன்பே அறிவித்த சிவ கார்த்திகேயன் போல, இப்போது தனுஷும் தனது கொடி படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறார்.

கொடி, வரும் தீபாவளி திருநாளில் திரைக்கு வருகிறது. இந்த படத்தில் முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார் தனுஷ். ஒருவர் பேராசிரியர். இன்னொருவர் அரசியல்வாதியாம். படத்தில் படு சூடான அரசியல் வசனங்களும் இருப்பதால், சட்டசபை நடக்காத நாளில் ரிலீஸ் ஆவது இன்னும் உத்தமம்.

படத்தை தனுஷின் வுண்டர்பார் நிறுவனமும், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ்சும் இணைந்து வழங்குகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS