திரைச்செய்திகள்
Typography

‘கனா’ படத்தின் ஹீரோயின் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இந்த ஆண்டின் தேசிய விருது கிடைக்க ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாக விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.

அதையெல்லாம் கேட்டு ஆனந்த புன்னகை பூக்கிற ஐஸ்சுக்கு கனா படத்தின் மூலம் கிடைத்த ஒரே ஆச்சர்யம் இதுதான்.

‘எந்தப்படம் வந்தாலும் வேணாம்னு சொல்லாத. ஏன்னா ஹீரோயினோட வாழ்க்கை கொஞ்ச காலத்துக்குதான்.

அதுக்குள்ள வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளணும்’ என்பாராம் அவரது அம்மா. ஆனால் கனா படத்தை பார்த்துவிட்டு, ‘இந்த ஒரு படம்தான் உள்னோட கடைசி படமா இருக்கும்.

இனி வேணாம்னு நீ முடிவெடுத்தாலும் நான் கவலைப்பட மாட்டேன்.

ஏன்னா இதைவிட சிறந்தப்படம் ஒன்று கடைசி படமா அமையவே அமையாது’ என்றாராம். சொல்லி சொல்லி ஆனந்தப்படுகிறார் ஐஸ்!

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்