திரைச்செய்திகள்
Typography

அமிர்தாஞ்சன் டப்பியில் ஆரோக்கியா பால்னு அடிச்சா அது பாலாயிடுமா?

என்னய்யா புதுக்கதை இது? என்று அடங்காமல் சிரிக்கிறது கோடம்பாக்கம். பிரச்சனை இதுதான். ஸ்ருதிக்கும், கவுதமிக்கும் இடையே வாய் தகராறு. சபாஷ் நாயுடு படத்தின் காஸ்ட்யூம் டிசைனராக இருக்கும் கவுதமி கொடுக்கும் எந்த ஆடைகளும் ஸ்ருதிக்கு பிடிக்கவில்லை. இதனால்தான் பிரச்சனை என்று மீடியாக்கள் ஊதி விட, சுமார் பதினைந்து நாட்கள் கழித்து இதற்கு பதிலளித்திருக்கிறது ஸ்ருதி வட்டாரம். “அப்படியெல்லாம் இல்ல. எல்லாம் கற்பனை” என்பதுதான் அந்த விளக்கத்தில் பொதிந்திருக்கும் விஷயம். “இதுக்கு முன்னாடி எத்தனையோ முறை ஸ்ருதிய பற்றி தப்பு தப்பா செய்திகள் வந்திருக்கு. எதற்கும் அவரும் சரி, அவர் சார்பாக செய்தி தொடர்பாளரும் சரி. பதில் சொன்னதேயில்லை. இப்போது மட்டும் ஏன் அலறியடித்துக் கொண்டு மறுக்கணும்? அப்ப ஏதோ ஒன்று நடந்திருக்குன்னுதானே அர்த்தம்?’ இப்படி கேட்க ஆரம்பித்திருக்கும் சந்தேக குரல்கள், இன்னும் எதை செய்தால் அடங்குமோ? 

BLOG COMMENTS POWERED BY DISQUS