திரைச்செய்திகள்

கனா சக்சஸ் மீட்டில் ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்த கருத்துக்கு இன்டஸ்ட்ரியிலிருந்து எக்கச்சக்க எதிர்ப்பு.

வொய்? அவர் சொன்ன உண்மை அப்படி. உண்மையை சொன்னால்தான் உலகம் உவ்வே... ஆகுமே?

ஆகிவிட்டது! படம் சக்சஸ் ஆகுதோ இல்லையோ... ரெண்டாவது நாளே சக்சஸ் மீட் வச்சுடுறாங்க என்று கூறியிருந்தார் அந்த விழாவில்.

அதற்கு சில தினங்களுக்கு முன்புதான் மாரி2 வுக்காக தனுஷும், அடங்க மறு படத்திற்காக ஜெயம் ரவியும் ஆனந்த கூத்தாடியிருந்தார்கள்.

அவர்களில் யாரோ ஐஸ்சை கொதிக்க கொதிக்க காய்ச்சியிருப்பார்கள் போல.

அடித்துப் பிடித்துக் கொண்டு ட்விட்டருக்கு வந்த ஐஸ், ‘நான் பேசுனது சும்மா ஜாலிக்காக.

நோ சீரியஸ். யார் மனசாவது புண்பட்டிருந்தா ஐ ஆம் ஸாரி’ என்று கூறியிருக்கிறார்.