தயாரிப்பாளர் சங்கத்தை நடிகர் விஷால் கேலி செய்து பேட்டியளித்ததாக எழுந்த சர்ச்சையை அடுத்து, அவர் ஒரு வாரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிற கோஷம் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது.
‘எழுத்து பூர்வமாக லெட்டர் கொடுங்க. பதில் சொல்றேன்’ என்று கூறிவிட்டார் விஷால். இந்த பூசல் ஊசல் எல்லாம் இந்த வருட இறுதியில் நடைபெறப் போகும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை ஒட்டிதான் என்பது பலருக்கும் சொல்லாமலே புரிந்திருக்கும். இசைஞானி இளையராஜாவின் கச்சேரி மூலம் வருமானத்தை ஈட்டி சங்கத்திற்கு 100 கோடியாவது டெபாசிட் செய்துவிட வேண்டும் என்று பதவிக்கு வரும்போது கூறிய தாணு, இப்போது அதற்கான முயற்சியில் தீவிரம் காட்ட ஆரம்பித்திருக்கிறார். இந்த நேரத்தில்தான், அவரை எதிர்த்து விஷால் ஆதரவு பெற்ற ஒருவர் நிறுத்தப்படுவார் என்கிறது தகவல்கள். அந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறாராம் நடிகரும், அரசியல் பிரமுகருமான ஜே.கே.ரித்தீஷ். ஒரு சினிமாவின் முதல் காட்சி போல ஆரம்பித்திருக்கும் இந்த களேபரம் போக போக சூடு பிடிக்கலாம். நடுநடுவே பைட் காட்சிகளும் வரக்கூடும் என்பதுதான் இப்போதைய நிலவரம்.
BLOG COMMENTS POWERED BY DISQUS