திரைச்செய்திகள்
Typography

ட்விட்டரில் கணக்கு ஆரம்பித்து இரண்டு வருஷங்களுக்கு மேலாச்சு. ஆனால் மயில் குஞ்சு பொறித்த மாதிரி, அளவாக மிக அளவாகதான் அதில் விஷயங்களை தெரிவித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

இந்த இரண்டு வருஷங்களில் அதிக பட்சமாக இருபது ட்விட் கூட வந்திருக்காது அதில். அப்படியொரு அபூர்வமான செய்தி பரிமாற்றத்தில், “நாங்களும் இடம் பிடிச்சுட்டோம்ல?” என்று ‘ஜோக்கர்’ டீம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். யெஸ்... இந்த படத்தை தன் வீட்டிலிருக்கும் ஸ்பெஷல் தியேட்டரில் பார்த்து புளகாங்கிதப்பட்டுவிட்டாராம் ரஜினி. உடனே தனது ட்விட்டர் தகவலாக படத்தை பாராட்டி இரண்டு வரிகள் எழுதிவிட்டார். காக்காய் உட்கார கமண்டலம் கவிழ்ந்ததா, அல்லது கமண்டலம் கவிழ்கிற நேரத்தில் காக்காய் உட்கார்ந்ததா தெரியாது. படம் செம பிக்கப்! 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS