திரைச்செய்திகள்
Typography

நாட்ல நகைச்சுவைக்கு தாறுமாறான பஞ்சம். தயவு பண்ணி பழைய சந்தானமா வந்திருங்கண்ணா... என்று உலக தமிழர்கள் கதறுகிறார்கள் சந்தானத்திடம்.

அவர் எந்த நாட்டுக்குப் போனாலும் இதுதான் புலம்பலாக இருக்கிறதாம்.

ரசிகர்களின் குரலே நம் குரல் என்று வாழ்கிறவர்களுக்குதான் வெற்றி நிச்சயம். ஆனால் சந்தானம் துளி வார்த்தை கேட்க வேண்டுமே? ம்ஹும்.

அவர் நடித்த நான்கு படங்கள் ரிலீசுக்கு முக்கிக் கொண்டிருக்க, நான்காவதாக ஒரு படத்தை துவங்கிவிட்டார்.

இந்த செய்தியை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அந்த புதுப்பட ஷுட்டிங் ஈசிஆர் பகுதியில் நடந்து கொண்டிருக்கிறது! சரி... அதிருக்கட்டும்.

அவர் நடித்த தில்லுக்கு துட்டு படம் ஒருவழியாக திரையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இது வெற்றி என்றால், சந்தானத்தின் ஹீரோ ஆசையை அந்த ஆண்டவனே வந்தாலும் அசைக்க முடியாது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்