திரைச்செய்திகள்
Typography

பரிதாப பபுள்கம் இப்போதைக்கு நம்ம பாலாதான்! தமிழ்சினிமா வரலாற்றிலேயே இல்லாதளவுக்கு நடந்துவிட்டது சோகம்.

பாலா இயக்கிய ‘வர்மா’ படத்தில் திருப்தியடையாத தயாரிப்பு நிறுவனம், அந்தப்படத்தை அப்படியே தூக்கி ஓரமாக வைத்து விட்டு கதாநாயன் துருவ் தவிர மீதி எல்லாரையும் மாற்றும் முடிவுக்கு வந்திருக்கிறது.

முக்கியமாக பாலாவை! இந்த அதிரடி நடவடிக்கையால் தயாரிப்பு நிறுவனத்திற்கு சுமார் பதினைந்து கோடி நஷ்டம்.

புதிதாக எடுக்கப் போகும் படத்தையும் சுமார் பதினைந்து கோடி இல்லாமல் திரைக்கு கொண்டு வர முடியாது.

இதையெல்லாம் சமாளிக்க என்ன செய்யப் போகிறார் துருவ்வின் அப்பா விக்ரம்? அந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு இலவசமாக கால்ஷீட் தரப்போகிறாராம்.

கருவாட்டை மீனாக்க வேண்டும் என்றால், திருவோட்டில் தேன் ஊற்றணும் போலிருக்கே?

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்