திரைச்செய்திகள்

சினிமா பைனான்சியர்களெல்லாம் ஒன்று சேர்ந்து சங்கம் ஆரம்பித்துவிட்டார்கள்.

இது தயாரிப்பாளர்களுக்கு தலைவலி என்றால், முன்னணி ஹீரோக்களுக்கு அதைவிட பெரிய தலையிடி! ஒரு படத்தை முடித்துக் கொடுக்காத ஹீரோக்கள் அடுத்த படத்திற்கு அட்வான்ஸ் வாங்க கை நீட்ட முடியாது.

இப்படியொரு ‘லாக்’ எப்படி விழுந்தது? பல பேரிடம் விதவிதமாக அனுபவித்த(?) பைனான்சியர்கள் தனித்தனியாக புலம்பிய போது ஏற்பட்ட ஒற்றுமையாம். இவங்க பங்குக்கு சினிமா என்னென்ன கேடுகளை சந்திக்கப் போவுதோ?